விழிப்புணர்வு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு நலக்கல்வியாளர் மாறன் தலைமை தாங்கினார். கல்லுாரி உதவி பேராசிரியர் லோகு முன்னிலை வகித்தார். கல்லுாரி சுகாதார பயிற்சியாளர் மேகலை வரவேற்றார். மேலுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, கொளஞ்சியப்பன் ஆகியோர் தொழுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுகாதார ஆய்வாளர்கள் பாலா, விக்னேஷ்வரன், கல்லுாரி செவிலிய ஆசிரியர்கள் ராணி, செல்வி, ராஜேஸ்வரி வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உதவி பேராசிரியர் பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.

Advertisement