மீன் குழம்பில் விஷம் கலந்து கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
குள்ளஞ்சாவடி: மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன்,50; இவரது மனைவி, விஜயா,48; இவர்களுக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கோபாலகண்ணன் கோயம்புத்துாரில் உள்ள கல்லுாரி ஒன்றில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார்.
வீட்டில் இருந்துவந்த விஜயாவிற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான தேவநாதன், 57; என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இது குறித்து கோபாலகண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன், மகனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கோபாலகண்ணன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் கோபாலகண்ணன் வீட்டில் கிடந்தார்.
உடன் அவரை அவரது உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சம்பவம் குறித்து விஜயாவிடம் விசாரித்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், விஜயா, தேவநாதன் ஆகிய இருவரும் திட்டம் தீட்டி, கோபாலகண்ணன் சாப்பிட்ட மீன் குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
அதையடுத்து விஜயா மற்றும் தேவநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்பபடுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு