த.வெ.க., நிர்வாகி 'போக்சோ'வில் கைது
செஞ்சி: காதல் தொல்லையால் 8ம் வகுப்பு சிறுமி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், த.வெ.க., நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். தாய் மற்றும் அண்ணன், அக்காவுடன் வசித்து வந்தார்.
சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது, செஞ்சி அடுத்த அங்கராயநல்லுார் கிராமத்தை த.வெ.க., கிளை பொருளாளர் தேனன் மகன் சரவணன், 25; என்பவர், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அவர், சரவணனின் பெற்றோரிடம் முறையிட்டார். அவர்கள், மகனை கண்டிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி தனது அண்ணனுடன் சென்ற சிறுமியை சரவணன் வழிமறித்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி அன்று இரவு துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது மகள் தற்கொலைக்கு சரவணன் மற்றும் அவரது அக்கா சங்கீதா ஆகியோர் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
புகார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனர். சங்கீதாவை தேடி வருகின்றனர். இவர், த.வெ.க., விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் குணாசரவணனின் மனைவி ஆவார்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு