சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.1.64 கோடி மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரசன்னராஜ் அண்ணாதுரை,41; சாப்ட்வேர் இன்ஜினியர்.

இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதைநம்பி, மர்மநபர் கூறியபடி பங்கு சந்தையில் பல்வேறு தவணையாக ரூ. 1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினார். அதற்கான லாபத் தொகையாக ரூ. 5 கோடி காட்டியுள்ளது.

ஆனால் லாப பணத்தை எடுக்க முடியவில்லை. மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement