டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நுாறடி சாலை, சோழன் நகரில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

டாக்டர்கள் லியோ குணாளன், சதீஷ் சக்கரவர்த்தி பங்கேற்று, புதிய ஷோரூமை குத்துவிளக்கேற்றி திறந்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.

ஆன் ஆப் ரோடர்ஸ் பைக்கர்ஸ் கிளப் தலைவர் மகேஸ்வர் மாரிமுத்து, துணை தலைவர் சிவா, அக்னி தமிழ் தனராஜன், ஐ லவ் பாண்டிச்சேரி அருண், பாலசந்தர், ஜீத்குமார் மற்றும் தொழிலதிபர்கள், வினியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்தவர்களை ஷோரூம் உரிமையாளர் ராஜவேலு வரவேற்றார்.

அவர் பேசுகையில், 'இந்த நிறுவனம் இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இங்கு, பல்வேறு மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் முதல் ரூ. 25 லட்சம் வரை மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு உள்ளன' என்றார்.

Advertisement