50 வயது ஆணுடன் 18 வயது பெண் ஓட்டம்

ஹூப்பள்ளி,: ஹூப்பள்ளியில், 50 வயது நபர், 18 வயது இளம் பெண்ணுடன் ஓடினார். மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
ஹூப்பள்ளியின் சாளுக்யா நகரில் 18 வயது இளம்பெண் வசிக்கிறார். இவரது தந்தை செக்யூரிட்டியாக உள்ளார். இதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் கோபி, 50, என்பவருக்கு திருமணமாகி, பிள்ளைகள் உள்ளனர்.
இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி, அவர் பின்னால் சுற்றினார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், பிரகாஷ் கோபியின் வசதியை பார்த்து, அவரை காதலிக்க துவங்கினார்.
வயதான நபரை, மகள் காதலிப்பதால், மனம் நொந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கடந்தாண்டு, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், பிரகாஷ் கோபி மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதற்கு பின், மகளை இங்கு வைத்திருந்தால் பிரச்னை ஏற்படும் என, கருதிய பெற்றோர், மஹாராஷ்டிராவின் கொல்லாபுராவில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால் ஜனவரி 3ம் தேதி, பாட்டி வீட்டில் இருந்து இளம்பெண், பிரகாஷ் கோபியுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார்.
இது குறித்து, ஹூப்பள்ளி நகர் போலீசாரிடம் பெற்றோர் புகார் செய்து, மகளை கண்டுபிடித்து தரும்படி மன்றாடினர்.
போலீசாரும் பல இடங்களில் தேடியும், 40 நாட்களாக இருவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோரும், தங்கள்மகளின் போட்டோவுடன்,பல இடங்களில்தேடுகின்றனர்.


மேலும்
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி
-
கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
-
பயணியர் உள்பட 2 ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து