பயணியர் உள்பட 2 ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து

சேலம்: ஈரோடு - கரூர் தடத்தில் உள்ள பசூர் - ஊஞ்சலுார் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும், 20(நாளை), 23, 25, 28 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும் திருச்சி -ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.


கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மேற்கண்ட நாட்களில் அதிகாலை, 5:10க்கு கிளம்பும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் மேற்கண்ட நாட்களில் இயக்கப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், கரூரில் இருந்து புறப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement