கும்பமேளாவில் புனித நீராடிய ரமேஷ் ஜார்கிஹோளி
பெங்களூரு: பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, பிரயாக்ராஜுக்கு சென்று மஹா கும்பமேளாவில் புனித நீராடினார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பின் கும்ப மேளா நடப்பதால், கர்நாடக முக்கிய புள்ளிகள் பலரும் கும்பமேளாவுக்கு செல்கின்றனர். மடாதிபதிகளும் செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், துணை முதல்வர் சிவகுமார், தன் மனைவி உஷா, மகள் ஐஸ்வர்யாவுடன் கும்பமேளாவுக்கு சென்றார். புனித நீராடினார்.
திரையுலக பிரமுகர்கள்,அரசியல் தலைவர்கள் என,பலரும் பிரயாக்ராஜுக்கு சென்று வந்தனர். பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தன் நண்பர்களுடன் கும்பமேளாவில் புனித நீராடினார்.
பசனகவுடா பாட்டீல் எத்னால் கோஷ்டியில் அடையாளம் காணப்படும் ரமேஷ் ஜார்கிஹோளி, மாநில தலைவர் விஜயேந்திராவை பதவியில் இருந்து மாற்றும்படி, மேலிடத்துக்கு நெருக்கடிகொடுக்கிறார்.
மேலும்
-
ஒட்டன்சத்திரத்தில் பனியால் கருகிய வெங்காய பயிர்கள்
-
மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி