கும்பல் மோதல்: வாலிபர் கொலை
ஹெச்.எஸ்.ஆர்.லே - அவுட்: இரு கும்பல் இடையில் ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு கோனப்பன அக்ரஹாராவில் வசித்தவர் நுாருல்லா, 32. இவர், கடந்த 10ம் தேதி இரவு நண்பருடன் டீ குடிக்க சென்றார். அப்போது டீக்கடை முன்பு, சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை நுாருல்லா தட்டி கேட்டார்.
இதனால் வாலிபர்களில் சிலர் நுாருல்லாவை தாக்கினர். கோபம் அடைந்த அவர், தனது நண்பர்கள் சிலரை போன் செய்து அங்கு வரவழைத்தார்.
இதையடுத்து இரு கும்பலுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, நுாருல்லாவை தாக்கி விட்டு வாலிபர்கள் கும்பல் தப்பியது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நுாருல்லா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.
மேலும்
-
மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி
-
கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு