மக்கள் தொடர்பு முகாம்

தேனி: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட குப்பிநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் நடந்தது.

பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 102 பயனாளிகளுக்கு ரூ. 3.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சாந்தி, உதவி இயக்குநர்கள் அப்பாஸ், மோகன்ராஜ், தாட்கோ மேலாளர் சரளா, தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

Advertisement