தியாக பிரும்ம ஆராதனை

தேவகோட்டை : தேவகோட்டை தியாகப்பிரும்ம ஆராதனை உற்சவ கமிட்டி சார்பில் ஆதிசங்கரர் கோவில் வளாகத்தில் தியாகபிரும்ம ஆராதனை விழா சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.

தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். துணை செயலாளர் ராமசாமி அறிக்கை வாசித்தார். கந்த சஷ்டி விழா கழக தலைவர் வீரப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜமீன்தார் சோமநாராயணன், பேராசிரியர் குமரப்பன், கவிஞர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் ஆடிட்டர் துரை, இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தினர். கர்நாடக சங்கீதம் என்ற நுாலை சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் சுந்தரராமன் வெளியிட்டார். திருப்பாவை திருவெம்பாவை திருவாசகம் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement