62 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது

ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ., முகமது யஹ்யா, போலீசார் ஆண்டிபட்டி - ஆசாரிபட்டி ரோடு பிரிவில் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் 62 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது.

புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த ராஜேஷ் 27, அவருடன் தொடர்பில் இருந்த மதுரை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முருகன் 29, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement