மகாலிங்க சுவாமி குருபூஜை விழா

பாலமேடு: பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குருபூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மேளதாளத்துடன் மாலை விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்தனர். பின் பெரிய மடத்திற்கு சென்று தீர்த்த அபிஷேகம், பஜனை நடந்தது. சாதுக்களுக்கு சொர்ணதானம், வஸ்திரதானம், அன்னதானம் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட சாதுக்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Advertisement