கத்தார் மன்னரை நேரில் வரவேற்ற பிரதமர் மோடி
புதுடில்லி: மேற்காசிய நாடான கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, அரசு முறை பயணமாக நேற்று, நம் நாட்டின் தலைநகர் டில்லிக்கு விமானத்தில் வந்தார். அவரை, விமான நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவு அதிகாரிகள், நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் தற்போது, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி இன்று காலை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். இதற்கிடையே கத்தார் மன்னரை நேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்படும்: அண்ணாமலை திட்டவட்டம்
-
3 மொழி கற்க உரிமை இல்லையா; மாணவிகள் வீடியோ வைரல்!
-
20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்
-
அனந்தா என்ற பெயருடன் பெங்களூருவில் பிரமாண்ட அலுவலகம் திறந்தது கூகுள்!
-
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டு சிறை
-
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சீனியர் மருத்துவர்களுக்கு 24 மணிநேரமும் பணி; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement