7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டு சிறை

கோவில்பட்டி: தூத்துக்குடியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த, ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட் உத்தரவிட்டது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2020ல் 7வயது சிறுமிக்கு, 43 வயதான ஆரோக்கியசாமி என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.

இது தொடர்பாக, வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார். ஆரோக்கியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு அளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement