சந்தேகத்தால் தாயை கொன்ற மகன்கள் கைது

பெ.நா.பாளையம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த மேட்டுடையார்பாளையத்தை சேர்ந்த கொத்தனார் பொன்னுவேல், 43; இவரது மனைவி வசந்தி, 40; தம்பதியரின் மகன்கள் கவின், 21, மற்றும் 17 வயது சிறுவன். வசந்தி நேற்று மதியம் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.



அப்பகுதி மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. ஏத்தாப்பூர் போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


போலீசார் கூறுகையில், 'கூலி வேலைக்கு சென்ற வசந்தி, அவருடன் வேலை செய்யும் ஒருவருடன் மொபைல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். சந்தேகமடைந்த இரு மகன்கள், வசந்தியிடம் நேற்று மதியம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


'அப்போது, ஆத்திரம் அடைந்த இருவரும், வசந்தியை சரமாரியாக கைகளாலும், கொடுவாளாலும் தாக்கியதில் பலியாகி விட்டார். இரு மகன்களையும் கைது செய்துள்ளோம்' என்றனர்.

Advertisement