மூணாறு - பழநி: பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகரிப்பு

மூணாறு : மூணாறில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மூணாறில், பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் குழுக்கள் ஒவ்வொரு குருசாமி தலைமையில் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.

இவர்கள் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையில் பாதயாத்திரை செல்வதுண்டு.

இந்தாண்டு பாதயாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மூணாறில் இருந்து பழநி 110 கி.மீ., தொலைவில் உள்ள பழநிக்கு ஒவ்வொரு குழுக்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடை பயணத்தை அமைத்து சென்று வருகின்றனர்.

மூணாறு நகர், பல்வேறு எஸ்டேட்டுகள், இடமலைகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்ட சண்முகநாதன் குழு நேற்று முன்தினம் பாதயாத்திரை புறப்பட்டனர்.

காலை மாலை வேளையில் கடுங்குளிர், பகலில் சுட்டெரித்த வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் 'அரோகரா' கோஷங்ங்கள் முழங்க பக்தர்கள் நடந்து சென்றனர்.

Advertisement