கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 26ம் ஆண்டு கலை பண்பாட்டு விழா நடந்தது.

பள்ளியின் நிறுவனர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ, எம்.கே.நர்சிங்ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன், கும்மிடிப்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பள்ளியின் செயலர் டாக்டர் ஞானதீபன் வரவேற்று பேசினார். அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் மற்றும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement