கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை

சென்னை,
இந்திய கைவினை கவுன்சில் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு மற்றும் விற்பனை கண்காட்சி, ஆழ்வார்பேட்டையில் உள்ள 'கமலா கிராப்ட் ஷாப்'பில், நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரேவதி சங்கரன் கூறியதாவது:
நவீன சமையல் பாத்திரங்களில் உணவு சமைக்கும் முறை, தற்போது உள்ளது. ஆனால், பண்டைய முறையான, கல் சட்டி, மண்பானை, ஈயம் போன்ற பாத்திரங்களில் சமைக்கும்போது, அதன் சுவை தனித்துவமாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தது. அது போன்ற பாத்திரங்கள், கமலா கிராப்ட் ஷாப்பில் கிடைக்கின்றன.
அதேபோல், பேன்ஸி ஆடை முறை வந்துவிட்டது. இதுவரை, பருத்தி, சுங்குடி மற்றும் கையால் நெய்யப்பட்ட சேலைகளை மட்டுமே உடுத்தி வருகிறேன். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமலா கிராப்ட்ஸ் ஷாப் நிர்வாகிகள் கூறுகையில், 'நாட்டின் பல மாநிலங்களின் சிறந்த சேலை வகைகள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் உள்ளன. தம்மம்பட்டி மர பொம்மைகள், பத்தமடை, வீரகனுார் பட்டு பாய்கள், பொம்மைகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன' என்றனர்.
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு