6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

ஜெருசலேம்: இன்று (பிப்.,22) திட்டமிட்டப்படி 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலிய ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அது முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பிறகு அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இவர்கள் இருவரும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் எலியா கோஹன், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் ஆகிய 4 பேர் இன்று விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் சிலர் ஹமாஸ் அமைப்பு பிடியில் உள்ளனர் அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (2)
RK - ,
22 பிப்,2025 - 18:30 Report Abuse

0
0
Reply
Varathappan Parthasarathy - Karur,இந்தியா
22 பிப்,2025 - 16:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆஸ்திரேலியா சாதனை வெற்றி * இங்லிஸ் சதம் விளாசி அசத்தல்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபியில் 'விறுவிறு'
-
ஜீவன்-விஜய் ஜோடி சாம்பியன்
-
இந்தியாவுக்கு ஐந்து தங்கம் * ஆசிய வில்வித்தையில்...
-
கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்
-
பிரேசிலில் நிலச்சரிவால் அழியும் நகரம்
Advertisement
Advertisement