சென்னை சந்திரகாச்சி ' ஏசி ' ரயில் 27ல் ரத்து

சென்னை,:இணை ரயில்கள் தாமதம், பராமரிப்பு பணி காரணமாக இரண்டு விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

 மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி - சென்னை சென்ட்ரல் மாலை 5:55 மணி, 'ஏசி' ரயில் வரும் 25ம் தேதியும்; சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி காலை 8:15 மணி, 'ஏசி' ரயில் வரும் 27ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன

 கோவை - ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் காலை 7:50 மணி சிறப்பு ரயில், வரும் 25ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement