சிறுமியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை,அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 12 வயதுள்ள ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் தேதி வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அவ்வழியே ஆட்டோவில் வந்த ஓட்டுநர், மாணவியின் கையை பிடித்து இழுத்து, அநாகரிகமாக நடக்க முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி பள்ளிக்கு சென்ற சிறுமி, வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை தெரிவித்து உள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடையாறு, தாமோதரபுரம் பிரதான சாலையைச் சேர்ந்த தங்கராஜ், 56, என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement