சென்னையில் இன்று மாநில யூத் தடகளம்

சென்னை,தமிழ்நாடு தடகளச் சங்கம் சார்பில், ஆறாவது மாநில அளவில் யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.

போட்டிகள், 18, 20 மற்றும்23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே நடக்கின்றன. இதில், 100 மீ., 200 மீ., 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட ஆண்களுக்கு 59 வகையிலும், பெண்களுக்கு 57 வகையிலும், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.

மாநில முழுதும் இருந்து, 1,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். போட்டியில் தேர்வாகும் 18 வயதுக்கு உட்பட வீரர்கள், பீஹார், பாட்னாவில் நடக்க உள்ள தேசிய யூத் போட்டியிலும், சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய போட்டியிலும், இந்திய அணியாக தேர்வு செய்யப்படுவர் என, தமிழ்நாடு தடகள சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement