ஹாக்கி 'லீக்'கில் 33 அணிகள் பலப்பரீட்சை

சென்னை,
எழும்பூரில் இன்று துவங்கும் முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், 33 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் இன்று துவங்குகின்றன.

போட்டியில், வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையார் யங்கஸ்ட் உள்ளிட்ட, 33 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொத்தம் எட்டு குழுவாக பிரிந்து, லீக் முறையில் மோத உள்ளன.

இன்று காலை, 6:30 மணிக்கு, ஜெய் ஹிந்த் கிளப் - ஹோல்ஸ் கிளப்; 7:30 மணிக்கு, பிரண்ட்ஸ் கிளப் - பால்ஸ் கிளப்; 8:30 மணிக்கு சேப்பாக்கம் யங்கஸ்ட்ஸ் - திருமால் அகாடமி அணிகள் எதிர்கொள்கின்றன.

Advertisement