ஜி.ஹெச்., 5வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்ட்ரல், திருவள்ளூர் மாவட்டம், மதர் தெரேசா கார்டன், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் குமார், 48. இவர், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். இவரது மனைவி பானுமதி. தம்பதிக்கு மகளும், மகனும் உள்ளனர்.
குமாருக்கு வலதுபக்க கழுத்தில் சிறிய கட்டி உருவாகி உள்ளது. இதனால், சில நாட்களாக கடும் வலியால் அவதியடைந்து வந்துள்ளார். இந்த நிலையில், 14ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு, இ.என்.டி., பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலியின் கொடுமை தாங்காமல் கடந்த நான்கு நாட்களாக தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், கழிப்பறைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, 5வது மாடிக்கு சென்ற குமார், ஜன்னல் வழியாக கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு