14வது மாடியிலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவர் தற்கொலை

முகப்பேர், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நிக்கோல் ஆன்டனி, 19; கடந்தாண்டு நடந்த பிளஸ் ௨ பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த அவரது பெற்றோர், மறு தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என, கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் நிக்கோல் ஆன்டனி, மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலை நிக்கோல் ஆன்டனிக்கு மறுதேர்வு இருந்தது.

அவரது பெற்றோர், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் படிப்பதற்காக அவரை எழுப்பி உள்ளனர்.

தேர்வுக்கு முறையாக தயாராகாததால், படபடப்பில் இருந்த நிக்கோல் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார்.

பின், நொளம்பூர் சர்வீஸ் சாலை அருகே வந்த போது, அங்கிருந்த உயரமான அடுக்குமாடி குடியிருப்பை கண்டு அங்கு சென்று உள்ளார்.

குடியிருப்பின், 14வது மாடிக்கு சென்ற நிக்கோல் ஆன்டனி, திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு காவலாளிகள், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement