ஸ்கூட்டரில் சென்றவர் வேன் மோதி உயிரிழப்பு

பெரம்பூர், பெரம்பூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 65. பாரிமுனையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, திரு.வி.க.நகர் பிரதான சாலை, 19வது குறுக்கு தெரு சந்திப்பு வழியாக, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, டி.என்.61 எப் 7894 என்ற எண் கொண்ட டெம்போ டிராவலர் வேன், நாகராஜன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட நாகராஜனுக்கு தலை மற்றும் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, திருப்பத்துாரை சேர்ந்த வேன் டிரைவர் துாக்கன், 38 என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement