நிறுத்தப்பட்டுள்ள நிதியை வழங்கணும்!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்காவிட்டால், 5,000 கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாக வரும் செய்தி, மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருமொழி கொள்கையின் அவசியம், சிறப்பு பற்றி, அண்ணாதுரை போன்ற தலைவர்கள், மத்திய அரசுக்கு எடுத்துரைத்தனர். அதனால்தான், மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது. அதன் அடிப்படையில், அலுவல் மொழிகள் விதி - 1976 வகுக்கப்பட்டு, இன்று வரை தமிழகத்தில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.

இத்தகைய அறிவுசார்ந்த முடிவால்தான், தமிழக மாணவர்கள் தாய்மொழி புலமையுடன் ஆங்கிலத்தையும் கற்று, உலகம் முழுதும் பல உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்; தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கு மும்மொழி கொள்கை தேவையற்றது என்பதில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிப்பை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை வழங்க மறுக்கக் கூடாது.

இது தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்களுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும். நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ள நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

உடனே நிதி வழங்க வேண்டும்

Advertisement