தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர் திருவொற்றியூர், இந்திரா நகர் பகுதியில், மத்திய அரசுக்கு சொந்தமான 'கான்கார்ட்' எனும் சரக்கு பெட்டக முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில், 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக சுமை துாக்கும் பணி செய்து வந்த 14 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் காவலாளி ஒருவர் என, 15 பேரை, நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது.
இது குறித்து, விளக்கம் கேட்டபோது, சமூகத்தை காரணம் காட்டி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சென்னை பெருநகர பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மீண்டும் பணி வழங்க கோரியும்,இழிவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கையில் பதாகைகளுடன், அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் சமாதாரம் பேசி, கலைந்து போக செய்தனர்.
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு