ரூ.1,100 கோடி ஜி.எஸ்.டி., விதிப்பு எதிர்த்து வாரியம் வழக்கு
சென்னை:தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரியாக, 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான நான்கு நிதியாண்டுகளுக்கு, 1,100 கோடி ரூபாய் செலுத்தும்படி, ஜி.எஸ்.டி., துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து, தமிழக மின் தொடரமைப்பு கழகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக மின் தொடரமைப்பு கழகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''ஜி.எஸ்.டி., முறை அமலுக்கு வரும் முன், மின் தொடரமைப்பு கழகத்துக்கு சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஜி.எஸ்.டி., விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம்,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்பான நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்; விசாரணையை ஏப்ரல், 7க்கு தள்ளிவைத்தார்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா