பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 57; இவர் சில தினங்களுக்கு முன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதேபோன்று, எலவனாசூர்கோட்டை அடுத்த சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாகூப், 58; இவர், 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தண்டபாணி, முகமதுயாகூப் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement