குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் துாய்மை பாரதம் திட்டத்தின் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் பகத்சிங் நகர், பாரேரி, திருத்தேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, துாய்மை பாரதம் திட்டத்தின் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் நடைபெற்றது.
இதில் குப்பை பெறுதல், பிரித்தல், குப்பை மேலாண்மை செய்தல் குறித்து, பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு