அரசு போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 2200 டிரைவர்கள் நியமனம்
மதுரை: 'அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2200 டிரைவர்கள் நியமிக்கும் பணி துவங்கிவிட்டது' என மதுரையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் புதிய விரிவாக்கப்பட்ட மினிபஸ் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, கலெக்டர் சங்கீதா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மதுரை, விருதுநகர்,கோவை, திருநெல்வேலி மண்டலங்களின் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் புதிய மினிபஸ்களை இயக்க 1810 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 1255 தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பஸ்களை இயக்க 278 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை மே 1ல் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் 2780 மினிபஸ்கள் இயங்குகின்றன. இவற்றில் சில இடங்களில் வழித்தடங்களை மாற்றி அமைக்க 540 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுபோல புதிய வழித்தடங்கள் தேவைப்படின் கலெக்டர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பத்தாண்டுகளில் 14 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. எனவே கூடுதலாக வாங்குவதற்கு 8 ஆயிரம் பஸ்களுக்கு டெண்டர் விடப்பட்டு 3 ஆயிரம் பஸ்கள் வந்துவிட்டன. மீதி 5 ஆயிரம் பஸ்களும் வந்தபின் பழைய பஸ்கள் மாற்றப்பட்டுவிடும். வரும் ஆண்டுக்கும் 3 ஆயிரம் பஸ்கள் வாங்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அவை பயன்பாட்டுக்கு வந்ததும் பழைய பஸ் பிரச்னை தீர்வுக்கு வந்துவிடும்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இத்தனை பெரிய நிறுவனமாக இருப்பதால் நெருக்கடியான காலங்களில் நஷ்டம் ஏற்பட்டு, தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இருப்பினும் நாம் பஸ்கட்டணத்தை உயர்த்தவில்லை. பக்கத்து மாநிலங்களில் நம்மைவிட 2 மடங்காக கட்டணம் உள்ளது. சேவை துறையால் மக்களுக்கு சுமை அதிகரிக்கக் கூடாது என்பதால் உயர்த்தவில்லை.
கடந்த ஆட்சியில் விடுபட்ட ஓய்வூதியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி வழங்கியுள்ளார். ஜனவரி மாதம் ரூ.300 கோடி, பிப்ரவரி மாதம் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர டிரைவர்கள் பணிநியமனம் துவங்கிவிட்டது. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற போக்குவரத்து கழகத்தில் 2200 டிரைவர்களை நியமிக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா