தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், தேசிய அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, நேற்று துவங்கி, வரும் 23ம் தேதி வரை, மூன்று நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

இதற்கான துவக்க விழா, நேற்று மாலை நடந்தது.

தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், தேசிய அளவில், 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.

இதில், நீதிமன்றத்தில் வாதாடுவது போல, மாணவர்கள் வாதம் செய்தனர்.

நிறைவு நாளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Advertisement