முதல்வரின் வாகனத்தில் தொங்கிய மஸ்தான்

திண்டிவனம் : திண்டிவனம் வருகை தந்த முதல்வரின் வாகனத்தில், மஸ்தான் எம்.எல்.ஏ., படிக்கட்டில் தொங்கியபடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுாரில் நேற்று நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக காரில் சென்றார். அவருக்கு, திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோடு அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களில் 'அப்பா' என்ற அடைமொழி அதிக அளவில் இடம் பெற்றிருந்தது. மேலும், இறையானுாரில், முதல்வர் வாகனம் கடந்த போது, பள்ளி குழந்தைகளை வைத்து, முதல்வரை 'அப்பா' என அழைக்க செய்தார்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர் மஸ்தான் உற்சாக மிகுதியால், முதல்வரின் வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது துாரம் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா