ரூ.3.84 கோடி மோசடி முன்னாள் பேராசிரியர் கைது

சென்னை:பொறியாளரை, 'டிஜிட்டல்' கைது செய்து, 3.84 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பொறியியல் கல்லுாரியின் முன்னாள் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையை சேர்ந்த, 74 வயதான பொறியாளரை, 'டிஜிட்டல்' கைது செய்து, 3.84 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில், கடந்தாண்டு டிச.,10ல், சென்னையை சேர்ந்த அப்ரோஸ், 31; திருவள்ளூரைச் சேர்ந்த லோகேஷ், 30; மாதங்கி ஹரீஷ்பாபு, 34 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின்படி, சென்னையை சேர்ந்த பரசுராமன், 35 என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவர், சென்னையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லுாரியில் உதவி பேராசியராக பணியாற்றி உள்ளார்.

Advertisement