6 நாளில் 745 கிலோ கஞ்சா பறிமுதல்

2

சென்னை:தமிழகத்தில், கடந்த ஆறு நாட்களில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 745 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எட்டு பேர் கைதாகி உள்ளனர்.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக தமிழகம் உள்ளது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், கடந்த 12 முதல் 17ம் தேதி வரை, ஆறு நாட்களில், மதுரை மாவட்டத்தில் 445, சென்னையில், 300 என, மொத்தம், 745 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட மாலத்தீவைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement