குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் அருகே, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது மண்ணுார். இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து நெமிலி வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

ஊராட்சி அலுவலகம் அருகே இருந்தும், குழாய் உடைப்பை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வருவதாகவும் பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் சேதமடைந்த குழாயை சீரமைத்து, குடிநீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement