கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்

47

சென்னை: மகா கும்ப மேளாவில் தமிழக கவர்னர் ரவி, பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று புனித நீராடினர்.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜன.13 முதல் மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. இது வரை 57 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழக கவர்னர் ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

கவர்னர் அறிக்கை:

உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. பல கோடி கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்.
இவ்வாறு கவர்னர் ரவி அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிவு:

உலகின் மிகப்பெரிய ஆன்மிகக் கூட்டமான மகா கும்பமேளாவில் பங்கேற்று பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பாக்யம் பெற்றேன் என்று கூறியுள்ளார்.

Advertisement