சாலையோரம் பாழடைந்த கிணறு கால்நடைகள் தவறி விழும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, காவலான் கேட் எதிரில் உள்ள வளத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெருவில், அப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக, பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு உள்ளது.

தற்போது, பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளும், கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, வளத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெருவில், பாழடைந்த கிணற்றை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement