ரயிலில் இருந்து விழுந்து ஸ்டேஷன் மாஸ்டர் பலி

மதுரை : கேரள மாநிலம் திருவனந்தபுரம் கீழரூரை சேர்ந்தவர் அனுசேகர் 31. மதுரைக் கோட்டத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று (பிப்.,20) காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பணி ஒதுக்கப்பட்ட நிலையில் காலை 8:00 மணிக்கு ஸ்டேஷன் வந்த அவர், மதுரை வரை சென்றுவர திட்டமிட்டார்.
காலை 8:30 மணிக்கு செங்கோட்டை - ஈரோடு பாசஞ்சரில் ஏற முற்பட்ட போது ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி, 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
வாசகர் கருத்து (1)
Sri - Coimbatore,இந்தியா
22 பிப்,2025 - 07:34 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
Advertisement
Advertisement