விபத்தில் பாதிக்கப்பட்டவருக்குசங்கத்தினர் உதவித்தொகை வழங்கல்



விபத்தில் பாதிக்கப்பட்டவருக்குசங்கத்தினர் உதவித்தொகை வழங்கல்


நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க நிர்வாகிக்கு, உதவித்தொகை வழங்கப்பட்டது.
இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சசிகுமார், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் நவலடி சேகர், பொருளாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமகிரிப்பேட்டை தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முடிவில், விபத்தில் சிக்கிய செயற்குழு உறுப்பினர் இளையப்பன் வீட்டிற்கு நேரடியாக சென்ற நிர்வாகிகள் உதவித்தொகையாக, 29,100 ரூபாய் வழங்கினர்.
செயலாளர் குப்புசாமி, பொருளாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement