சிவகங்கையில் புத்தக கண்காட்சி

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கண்காட்சியை துவக்கி வைத்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) ரமேஷ், கண்காணிப்பாளர் சுந்தரமாணிக்கம், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, பபாசி செயலாளர் முருகன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மார்ச் 2 ம் தேதி வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும். தினமும் மாலை பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு நடைபெறும்.

Advertisement