படைத்தளபதிகள் டிஸ்மிஸ்: டிரம்ப் அரசு உத்தரவு

11


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல, கடற்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை துணை தலைமை தளபதியும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், தினமும் ஏதாவது சில தடாலாடி உத்தரவை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், இன்று அந்நாட்டு முப்படை தலைமை தளபதி சார்லஸ் பிரவுனை டிஸ்மிஸ் செய்தார். அவருக்கு பதிலாக, விமானப்படையை சேர்ந்த லெப்., ஜெனரல் ஜான் ரஸின் கைன் என்பவரை முப்படை தலைமை தளபதியாக நியமித்தார். இந்த கைன் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் இப்படி அறிவித்த சில நிமிடங்களில், கடற்படை தளபதி அட்மிரல் லிஸா பிரான்செட்டி நீக்கப்படுவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹெக்செத் அறிவித்தார். அதேபோல, விமானப்படை துணை தளபதியான ஜேம்ஸ் ஸ்லைப் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement