ஜெர்மனிக்கு பதிலடி கொடுத்தது இந்தியா: புரோ லீக் ஹாக்கியில்

புவவேஸ்வர்: புரோ லீக் ஹாக்கியில் எழுச்சி கண்ட இந்திய பெண்கள் அணி 1-0 என ஜெர்மனியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024----25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் தீபிகா ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய ஜெர்மனி வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தவிர, முதல் போட்டியில் ஜெர்மனியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி தந்தது. இந்திய அணி, இதுவரை விளையாடிய 6 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி என 7 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து இந்திய அணி, நெதர்லாந்தை (பிப். 24, 25) எதிர்கொள்கிறது.
புவனேஸ்வரில் நடந்த ஆண்களுக்கான புரோ லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மீண்டும் மோதின. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 4-0 என வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு நிலாம் சஞ்ஜீப் (14வது நிமிடம்), மன்தீப் சிங் (24வது), அபிஷேக் (28வது), ஷாம்ஷேர் சிங் (34வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஏற்கனவே அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, 6 போட்டியில், 4 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து இந்திய அணி, இங்கிலாந்தை (பிப். 24, 25) எதிர்கொள்கிறது.
மேலும்
-
வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே
-
சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது
-
அரசு மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் கட்டடம் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைப்பு
-
தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றிய செயற்குழு கூட்டம்
-
அரவக்குறிச்சி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு