திருக்கச்சூர் -- பேரமனுார் சாலை விரிவாக்க பணி விறுவிறு

மறைமலை மறைமலை நகர் - திருக்கச்சூர் சாலை 5 கி.மீ., தூரம் உடையது. இந்த தடத்தில் திருக்கச்சூர், பேரமனுார், பனங்கொட்டூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் - - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மறைமலைநகர் -- பேரமனுார் வரை 3.5 கி.மீ துாரம் இரண்டு கட்டங்களாக 2023ம் ஆண்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்றது.
தற்போது திருக்கச்சூர் -- பேரமனுார் வரை 1.5.கி.மீ., தூரம் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருக்கச்சூர் -- பேரமனுார் சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024- - 25ன் கீழ் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டு உள்ளது. 1.4 கி. மீ., இடையே 5 இடங்களில் மழைநீர் செல்லும் பெட்டி வடிவ 5 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் மாற்று பாதையான மறைமலைநகர் - ஆப்பூர் சாலை,சிங்கபெருமாள் கோவில் சாலைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து