சுடப்பட்ட காமுகனுக்கு சென்னையில் ஆப்பரேஷன்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், கடந்த, 19ல், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள மலைப்பகுதியில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், ஒருவனுக்கு மாவுக்கட்டு போடப்பட்ட நிலையிலும், மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுரேஷ், 23, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், அவருக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. மேல் சிகிச்சைக்காக, நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு காலில் ஆப்பரேஷன் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சுரேசின் மொபைல் போனில், கல்லுாரி மாணவியர் உட்பட பல இளம்பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

கைதானவர்கள் மீது, ஏற்கனவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா ஸ்டேஷனில் இரு வழக்குகள் உள்ள நிலையில், தற்போதைய வழக்கில், மேலும் பாதிக்கப்பட்ட சிலரை சேர்க்கவுள்ளதாகவும், போலீசாரை கத்தியால் தாக்கிய சுரேஷ், நாராயணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement