நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீஹார் வாலிபர்களுக்கு அடி உதை

சங்கராபுரம்:நகை பாலிஷ் போடுவதாக மோசடி செய்த பீஹார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மகாலட்சுமி, 30. இவரிடம் நேற்று காலை, வடமாநில வாலிபர்கள் இருவர், நகை பாலிஷ் போட்டுத் தருவதாக கூறினர்.
நம்பிய மகாலட்சுமி, தான் அணிந்திருந்த 3 சவரன் செயினை கழற்றி கொடுத்தார்.
சற்று நேரம் கழித்து செயினை பல துண்டுகளாக்கி கொடுத்துவிட்டு இருவரும் தப்பி ஓட முயன்றனர்.
மகாலட்சுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், பாலீஷ் போடுவதாக கூறி, செயினில் இருந்து 6 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்திருப்பது தெரியவந்தது. இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
சங்கராபுரம் போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அவர்கள், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோனுகுமார், 25, சந்தன்குமார், 24, என்பது தெரிந்தது.
இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து