சமையல் சிலிண்டர் வெடித்து 6 பேர் காயம்
கலவை:ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர்கள் மூவர் உட்பட, 6 பேர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பஜார் வீதியில் அல்தாப் ஹார்டுவேர், பெயின்ட் கடை இயங்கி வருகிறது. மூன்று மாடி கொண்ட அக்கடையில், கடை விரிவாக்க பணிக்காக வெல்டிங் பணி நேற்று நடந்தது.
அப்போது, வெல்டிங் மிஷினில் இருந்து தீப்பொறி பறந்து, அங்கு வைத்திருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது பட்டு தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைத்தும் முடியாததால், கலவை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடங்கினர்.
அவர்களாலும் முடியாததால், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில், மூன்று தீயணைப்பு வீரர்கள் உட்பட, 6 பேர் படுகாயமடைந்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து