காய்கறி வியாபாரி பலிமனைவி போலீசில் புகார்
காய்கறி வியாபாரி பலிமனைவி போலீசில் புகார்
குமாரபாளையம்:குமாரபாளையம், வளையக்காரனுார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 59; காய்கறி வியாபாரி. இவரது மனைவி பொன்னியம்மாள். கடந்த, 13 மாலை, வட்டமலை சந்தைக்கு காய்கறி வியாபாரத்துக்கு ஆறுமுகம் சென்றார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இவர் வீட்டில் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, சில நாட்கள் கழித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் வீட்டுக்கு வராத கணவர், ஊருக்கு சென்றிருப்பார் என, மனைவி பொன்னியம்மாள் நினைத்துள்ளார். இந்நிலையில், கடந்த, 21ல் பொன்னியம்மாளுக்கு போன் செய்த உறவினர் பாலமுருகன், ஆறுமுகம் இறந்து கிடந்த புகைப்படத்தை காட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த பொன்னியம்மாள், குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், கடந்த, 14ல் ஆனங்கூர் மதுக்கடை முன் கீழே விழுந்து கிடந்த ஆறுமுகத்தை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர், கடந்த, 20ல் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து